எம்புரான் படத்த்தின் சில காட்சிகளால் தமது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனதார வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் தெரிவித்தார். தனது பேஸ்புக் பக்கத்தில் இதை தெரிவித்துள்ள அவர், ஒரு கலைஞனாக தனது படங்கள் எதுவும் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக் குழுவுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே தனது கடமை என்றும் கூறினார். உங்கள் அன்பும் நம்பிக்கையுமே எனது ஒரே பலம் அதை விட மோகன்லால் பெரிய ஆள் இல்லை என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.