இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு தெலங்கானா மாநில துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜுக்கு குரூப்-1 அரசுப் பணி, சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார்.