இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்ல விளையாட இருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு. 2023ல நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைக்கு அப்புறமா காயம் காரணமா சர்வதேச போட்டிகள்ல விளையாடாம இருந்தாரு ஷமி. இந்த நிலையில ஷமி பயிற்சிகள மேற்கொண்டு வர்றதாவும், ஷமியின் உடல்நிலைய பிசிசிஐ உற்றுநோக்கி வர்றதாவும் சொல்லப்படுது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமா இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகள்ல விளையாட இருக்கும் நிலையில ஷமி அணிக்கு திரும்புறது இந்திய அணிக்கு கூடுதல் பலமா பார்க்கப்படுது.