சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அழைப்பை ஏற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடினார்.ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மொயீன் அலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.