பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று குவைத் நாட்டிற்கு செல்ல உள்ளார். குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, இன்றும் நாளையும் அங்கு தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் செல்வது இதுவே முதன் முறையாகும்.