கணவன் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி. இறுதி அஞ்சலியின் போது உயிரிழந்தவரின் காதில் இருந்து ரத்தம் வழிந்ததால் சந்தேகம். பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல். மார்பு மற்றும் முகத்தில் அதிக காயங்கள் இருந்ததாக ரிப்போர்ட். மனைவியை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். பிரியாணியில் 20 தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம். 19 வருட திருமண வாழ்க்கை கொலையில் முடிந்தது ஏன்? நடந்தது என்ன?காதில் இருந்து ரத்தம் வழிந்ததால் சந்தேகம்ஜனவரி 18ம் தேதி. பதற்றத்தோட பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போன லட்சுமி, என் கணவர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரழந்துட்டாருன்னு சொல்லி கதறி அழுதுருக்காங்க. இதகேட்டு லட்சுமியோட வீட்டுக்கு ஓடிப் போன அந்த நபர்கள், சிவநாகராஜூ கிடந்த கோலத்த பாத்து அதிர்ச்சியடைஞ்சு மனைவி லட்சுமிக்கு ஆறுதல் சொல்லிருக்காங்க. அடுத்து சிவநாகராஜூ உயிரிழந்தத பத்தி சொந்தக்காரங்க, ப்ரண்ட்ஸ்ன்னு எல்லாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகளும் தீவிரமா செய்யப்பட்டிருக்கு. இறுதி அஞ்சலிக்கு கணவர் சிவநாகராஜூவோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்துருக்காங்க. அப்ப சிவநாகராஜூவோட காதுல இருந்து ஒரே ரத்தமா வந்துருக்கு. இதபாத்து சந்தேகமடைஞ்ச நண்பர்கள், சிவநாகராஜூ ஓட தந்தை கிட்ட தகவல சொல்லி, காவல் நிலையத்துல புகார் அளிச்சுட்டாங்க. இந்த புகார் அடிப்படையில சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க.அதுபடி மறுநாள் வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல சிவநாகராஜூவோட நெஞ்சுலையும், முகத்துலையும் காயங்கள் இருந்ததா குறிப்பிட்டு இருந்துச்சு. இதனால இத கொலை வழக்கா பதிவு செஞ்ச போலீஸ், லட்சுமிய கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. அதுல தான அவங்க எல்லா உண்மைகளும் ஒன்னு ஒன்னா வெளியில வந்துருக்கு. விசாரணையில் உண்மையை உளறிய லட்சுமிஆந்திராவுல உள்ள சிலுவூரைச் சேர்ந்த சிவநாகராஜு - லட்சுமி மாதுரி தம்பதிக்கு 2007ம் ஆண்டுல கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ரெண்டு ஆண் குழந்தைகள் இருக்கு. சொந்த ஊர்ல எந்த ஒரு வேலையும் கிடைக்காததால, சிவநாகராஜூ தன்னோட குடும்பத்தினரோட ஹைதராபாத்துக்கு குடிபோய்ட்டு வெங்காய வியாபாரம் பண்ணிட்டு இருந்தாரு. லட்சுமி ஒரு திரையரங்குல வேலை பாத்துட்டு இருந்தாங்க. அப்ப அந்த திரையரங்கிற்கு அடிக்கடி படம் பாக்க வந்த, கோபி-ங்குற நபரோட லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கு.கோபியுடனான கள்ளக்காதலை தொடர்ந்ததால் ஆத்திரம்அடுத்து ஃபோன் நம்பர பரிமாறிக்கிட்ட ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸா பழக ஆரம்பிச்சுருக்காங்க. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. கோபி ஒரு டிராவல்ஸ் வச்சு நடத்திட்டு இருந்துருக்காரு. இதனால தன்னோட கணவன, கோபி கூடவே வேலைக்கு சேர்த்து விட்ட லட்சுமி, கணவன அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி விட்டுட்டு கோபி கூட அடிக்கடி தனிமையில இருந்துருக்காங்க. ஆனா இந்த விஷயம் கணவர் சிவராஜூவுக்கு தெரியவந்துக்கு. இதனால மனைவிய போட்டு சரமாரியா தாக்குன சிவநாகராஜூ, அவங்கள கூப்டுட்டு சொந்த ஊருக்கே திரும்பிட்டாரு. ஆனா இங்க வந்ததுக்கு அப்புறமும் லட்சுமி தன்னோட தகாத உறவ தொடர்ந்துட்டு தான் இருந்துருக்காங்க. அடிக்கடி காதலன் கூட ஃபோன்ல பேசுறது, நைட்டு ஃபுல்லா சேட் பண்றதுன்னு இருந்துருக்காங்க. இத பாத்து கடும் கோபமான சிவநாகராஜூ, மனைவிய அடிச்சுருக்காரு. கோபி கூடஇனி பேசவே கூடாதுன்ன ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு.காதலன் கோபி, லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸ்இதனால ஆத்திரமடைந்த லட்சுமி, சிவநாகராஜூ உயிரோட இருக்க வர்ற, கோபி கூட பேச முடியாதுன்னு நினைச்சு, கணவன கொலை பண்ண காதலன் கூட சேந்து திட்டம் போட்ருக்காங்க. அதுபடி சம்பவத்தன்னைக்கு வீட்ல பிரியாணி செஞ்ச லட்சுமி அதுல 20 தூக்க மாத்திரையை கலந்து கணவனுக்கு கொடுத்துருக்காங்க. அதசாப்பிட்ட சிவநாகராஜூ அடுத்து கொஞ்சம் நேரத்துலையே ஆழ்ந்து தூங்கிட்டு இருந்தாரு. அப்ப தன்னோட காதலன் கோபிய ஃபோன் பண்ணி வரவச்ச லட்சுமி காதலன் கூட சேந்து கணவன சரமாரியா தாக்கிருக்காங்க. அடுத்து சிவநாகராஜூவோட நெஞ்சுல அமர்ந்த கோபி, அவர கண்மூடித்தனமா தாக்கிட்டு, தலையணையால முகத்த அமுக்கி துடிதுடிக்க கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டான். வீட்ல தனியா இருந்த லட்சுமி, சடலம் பக்கத்துல உட்காந்து நைட்டு ஃபுல்லா ஆபாச படங்கள பாத்துருக்காங்க. அடுத்து அதிகாலை 4 மணிக்கு தன்னோட கணவன் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துட்டதா நாடகமாடிருக்காங்க. ஆனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் லட்சுமிய அரெஸ்ட் பண்ணிட்டாங்க. Related Link திக் திக் சஸ்பென்ஸில் பிரேமலதா