லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லெபனானில் இருந்து 25 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், இஸ்ரேல் எல்லையை தாக்கியதாகவும், ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.