சாலை வரி பிரச்சனை தொடர்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிங்களுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 7ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை, கேரள போக்குவரத்துத்துறையினர் சிறை பிடித்து 70 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கர்நாடகாவிலும் கடந்த ஒரு வாரமாக தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு, தலா 2 லட்சத்து 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதையும் பாருங்கள் - ஆம்னி பேருந்து பிரச்சனை - பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு | Omni Bus | TN Govt