சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் எ.வ. வேலு, எம்ஜிஆர் படத்தின் பாடலை பாடி கலகலப்பாக்கினார். சின்னப்பயலே..சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடலை ராகத்துடன் பாடினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, எம்ஜிஆரின் முதல் ரசிகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என கூறினார். ஜெயலலிதா நினைவிடத்தை கட்டி முடிப்பதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு ஒப்பந்ததாரருக்கு நிலுவையில் இருந்த 6 கோடி ரூபாய் பணத்தை உடனடியாக வழங்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.