மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக இன்று கத்தாருக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின் போது கத்தாரின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.