உலகிலேயே, மிகப்பெரிய சிலந்தி வலை ஒன்றை, அல்பேனியன் கிரீக் பார்டர் பகுதியில், விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கந்தகம் என்று அழைக்கப்படக்கூடிய சல்ஃபர் நிறைந்துள்ள ஒரு ஆழமான குகையில தான், இந்த ராட்சத சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் ஆயிரத்து 140 சதுர அடிக்கு பரவி உள்ள இந்த சிலந்தி வலைக்குள், கிட்டத்தட்ட 1 லட்சத்து 11,000 சிலந்திகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் நடத்திய தீவிர ஆய்வில், இங்குள்ள சிலந்திகள் சல்ஃபரை உணவாக சாப்பிட்டு, மிகவும் ஆரோக்கியமாகவும், அதிகளவில் இனப்பெருக்கம் செய்வதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அபூர்வமான வீடியோ, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இதையும் பாருங்கள் - ஒரே இடத்தில் லட்சக்கணக்கான சிலந்திகள், மிரண்டு போன இணையம் | Viral Video | Spider Web