ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்து, அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிபொருட்களை நவ்காம் காவல் நிலையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்த வெடிபொருட்கள் அனைத்தும் காவல்நிலையத்தின் தனிஅறையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தீயில் சிக்கி படுகாயமடைந்து 7 பேர் பலியான நிலையில், 27 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதையும் பாருங்கள் - Naugam Police Station | காவல் நிலையத்தில் கோரம் 300 மீட்டர் தூக்கி வீசப்பட்ட உடல்கள்