பல ஆண்டுகளாக இணையவாசிகளின் விருப்ப காணொலி செயலியாக இருந்து வரும் மைக்ரோசாப்ட் Skype க்கு வரும் ஐந்தாம் தேதி மூடுவிழா நடக்கிறது. அதன் பிறகு இந்த செயலி இயங்காது எனவும் அதற்கு மாற்றாக Teams என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்துவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது Skype ஐ பயன்படுத்தும் பயனர்கள் அதே ID உடன் Teams செயலிக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். இதற்காக எளிதான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Teams காணொலி செயலியில் Skypeஐ விடவும் சிறந்த பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தொழில்முறையில் அதை பயன்படுத்துபவர்களுக்காக பல சிறப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.