மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆட்டத்தில் 7-6, 5-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸாண்ட்ரா ஈலாவை வீழ்த்திய ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.