தமிழகத்தில், 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னையில், இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னை சென்ட்ரல், அண்ணாசாலை, எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர்.