உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மெட்டா, அடுத்த வாரம் முதல் தனது ஊழியர்களை பணிநீக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்து வரும் ஊழியர்களை வரும் 10ம் தேதி முதல் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.