வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் விழுப்புரம், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமையிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.