நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படத்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார். அப்படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால் தாம் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் தன்னை பாராட்டியது மன உளைச்சலில் இருந்து மீள உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.