அனுப்புனர், பெறுநர் என எந்தவித விவரமும் இல்லாமல் டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட புழு பிடித்து கெட்டுப்போன ஆயிரத்து 500 கிலோ ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தில் அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.