சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியின் முதல் ஓவரை மெய்டனாக வீசி இந்திய பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அஜித் அகர்கர், அர்ஷ்தீப் சிங் வரிசையில் சர்வதேச டி20 அறிமுகத்தில் முதல் ஓவரை மெய்டனாக வீசிய 5வது இந்திய பவுலராக மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார். அதேபோல் வங்கதேச வீரர் மஹ்மதுல்லா விக்கெட்டை எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை மயங்க் யாதவ் கைப்பற்றியுள்ளார்.