கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் புலிகள் காப்பகத்தில் உள்ள புலி ஒன்று தனது குட்டியை வாயில் கவ்வியபடி தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அக்காப்பகத்தில் சமீப நாட்களாக குட்டியிட்ட புலிகள் அதிகமாக தென்படும் நிலையில் தாய் புலி ஒன்று தனது குட்டியை வாயில் கவ்வியபடி வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து சென்றது. அதன் பின்பு தாய் புலியின் பின்னால் இரண்டு குட்டிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் தத்தி தவழ்ந்து செல்லும் காட்சிகளை வனப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் வியப்பாக கண்டு ரசித்ததோடு, வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை ரசிக்க வைத்துள்ளது.