அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் குடும்பத்துடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மஸ்க்கின் குழந்தைகளை பிரதமர் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவன சேவையை தொடங்குவது பற்றியும், மின்சார வாகன உற்பத்தி குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.