பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய்கிரகத்தின் மிகப்பெரிய விண்கல், நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 45 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. நியூயார்க்கில் Sotheby நிறுவனம் சார்பில் 20 கோடி ரூபாய் ஆரம்ப விலையில் ஏலம் விடப்பட்ட இந்த விண்கல்லை,15 நிமிட கடும் போட்டிக்கு பிறகு இந்திய மதிப்பில் 45 கோடியே 68 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.