பெரு நாட்டின் லிமா நகரில் காதலர் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர். உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லிமா நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், திருமண மோதிரங்களை மாற்றிக் கொண்ட ஜோடிகள், முத்தங்களுடன், தங்களது அன்பையும் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து தங்களது இணையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.