கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்தார். இதனையடுத்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் ஆகவும், கனடாவின் 24 வது பிரதமர் ஆகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார்.