இந்தியாவுடன் சீர்குலைந்த உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னி உறுதி அளித்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜஸ்டின் காரணமாக இந்திய - கனடா உறவு மோசமடைந்த நிலையில் அதனை மீண்டும் கட்டி எழுப்ப விரும்புவதாக கூறினார். இதன்மூலம் இருநாட்டு உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.