சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மெதினாவில் பல பகுதிகள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெட்டா நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.