தனக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் தன்னிடம் கூறிய போது, இறந்து விடுவேன் என நினைத்ததாக மனிஷா கொய்ராலா மனம் திறந்து பேசினார். லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கடவுளின் ஆசியால் கருப்பை புற்று நோயிலிருந்து மீண்டுள்ளதாகவும், திரும்ப வாழவும் கற்றுக் கொண்டதாகவும் உருக்கமாக பேசினார்.