முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்வரெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மொனாக்கோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ், இத்தாலியின் மெட்டியோ பெரேட்டினி உடன் மோதினார். இதில் முதல் செட்டை 6க்கு 2 ஸ்வரெவ் கைப்பற்றிய நிலையில், அடுத்த இரண்டு சுற்றுகளை பெரேட்டினி வென்றார்.