கடந்த சில ஆண்டுகளாக கண்ணில்படாமல் இருந்த மாஞ்சா நூல் பட்டம் கடந்த 2 வாரங்களாக வடசென்னை பகுதிகளில் பறந்து கொண்டிருப்பதால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.விடுமுறை நாட்களில் போட்டிபோட்டு பட்டம் பறக்க விடும் சிறுவர்களுக்கு மாஞ்சா நூல் எப்படி கிடைக்கிறது? மாஞ்சா நூல் விற்பனை செய்வது யார்? என்பதை காவல்துறையினர் கவனமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..