கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில், போலீஸ் கமிஷனர் வினீத் கோயலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, சில நாட்கள் காத்திருக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என போராட்டம் அங்கு வலுத்து வருகிறது. இந்நிலையில் வினீத் கோயலின் ராஜினாமாவை நிராகரித்த மம்தா, துர்கா பூஜை வர உள்ளதால், சட்டம்-ஒழுங்கை பற்றி தெரிந்த நீங்கள் இருக்க வேண்டும் என கூறி, அவரை சில நாட்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது