ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது மயக்கமடைந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர் கொண்டு நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மயங்கி கீழே விழப்போன போது, மேடையில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்து இருக்கையில் அமர வைத்தனர்.