திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளில், கற்பக விருட்ச வாகனத்தில், ராஜமன்னார் அலங்காரத்தில், ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார். சொர்க்கத்தில், தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது, கற்பக விருட்ச மரம். அதுபோன்று, கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று காலை, ராஜமன்னார் அலங்காரத்தில் காட்சி அளித்தார். கற்பக விருட்ச வாகனத்தில், பக்தர்களின் ’கோவிந்தா’ கோஷத்திற்கு மத்தியில், நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், கோலாட்டம், பஜனை, கிருஷ்ணர், மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரத்தை விளக்கும் வேடமணிந்து, சுவாமி உடன் வீதி உலாவில் பங்கேற்றனர்.