மஞ்சுமல் பாய்ஸின் வசூல் சாதனையை மோகன் லால் நடித்த எம்புரான் திரைப்படம் முறியடித்துள்ளது. உலகளவில் 242 கோடி ரூபாய் வசூலுடன் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பட்டியலில் மஞ்சுமல் பாய்ஸ் முதலிடத்தில் இருந்த நிலையில், எம்புரான் திரைப்படம் 10 நாட்களில் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த சாதனைக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.