மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதிய ஷோரூமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆரம்பித்துள்ளது. இதனை அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி மைக்கேல் ஸ்டீல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மலபார் குழுமத்தின் தலைவர் அகமது, அப்துல் சலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஷோரூம் அமெரிக்காவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், விரைவில் ஆறாவது கிளை ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் திறக்கப்படும் என அக்குழுமத்தின் தலைவர் அகமது தெரிவித்துள்ளார்.