சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. மேள, தாளம் முழங்க தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும் திருவாபரண பெட்டி மேல்சாந்தி உள்ளிட்டோரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதனை காண சபரிமலையில், பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர்.இதையும் பாருங்கள் - மழை நீரில் சாய்ந்த அறுவடைப் பயிர்கள்