மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் முக்கிய சூத்திரதாரியான சவுரப் சந்திராகர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து, அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் வைத்து அவர் கைது செய்யப்பட்டது குறித்து யுஏஇ வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தினருக்கு தகவல் அளித்த தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் சட்டபூர்வ நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாவீர் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை இது வரை 11 பேரை கைது செய்துள்ளது.