திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, பிஜூ ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் இணைந்து கேக் வெட்டும் புகைப்படத்தை மஹுவா மொய்த்ரா பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். தம்பதிக்கு இணையவாசிகள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், எம்.பி சயோனி கோஷ் எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.