மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான BE.05 எலக்ட்ரிக் கார், வரும் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காருக்கான சோதனை பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், சமீபத்தில் கூட முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.