எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம் என்றும், பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.