நியூசிலாந்து அருகே பயணிகள் கப்பல் கடல் கொந்தளிப்பால் பக்கவாட்டில் சாய்ந்த போது அதன் ஊழியர்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கவுன்ட்டர்களோடு ஒட்டிக்கொண்டு நின்ற வீடியோ வெளியாகி உள்ளது. சொகுசு கப்பலான கிரவுன் பிரின்சஸ், நியூசிலாந்து அருகே மில்ஃபோர்டு சவுண்ட் வழியாக பயணிகளுடன் சென்றபோது கடல் கொந்தளிப்பில் சிக்கிய கப்பல் 14 டிகிரி சாய்ந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் 16 பேர் காயமடைந்தனர். முன்னதாக கப்பல் 14 டிகிரி அளவிற்கு சாய்ந்த போது சமையலறையில் உள்ள பாத்திரங்கள் தரையில் விழுந்ததால் உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் சிதறியது.