துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் சாதனை படைத்துள்ளது. துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள நிலையில், ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் 13 வாரங்கள் தொடர்ந்து, டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.