"லப்பர் பந்து" திரைப்படம் தனது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகர் டி.எஸ்.கே. என அழைக்கப்படும் திருச்சி சரவணக்குமார் தெரிவித்தார்.இந்த படம் வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து டி.எஸ்.கே. கூறுகையில், தான் 18 படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து தான் தமது முதல் படம் போல உணர்ந்ததாகவும், அந்தளவுக்கு நிறைய கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.மேலும், இதுவரை காமெடி நடிகராக பார்க்கப்பட்ட தாம், இந்த படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பதாகவும், கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் மைதானத்தில் நாள் முழுவதும் நடந்தது சற்று சிரமமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.