கேரள மாநிலம்... வீட்டிற்குள் இருந்த இளைஞரை சுத்துப்போட்ட கும்பல். இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியதால் அதிர்ச்சி. ரயிலுக்காக காத்திருந்த கொலையாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ். காதல் விவகாரம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம். இளைஞரை கொலை செய்த நபர்கள் யார்? இருதரப்புக்கும் இடையே என்ன பிரச்னை?ஆள் நடமாட்டம் இல்லாம பரப்புக்கரா பகுதியே அமைதியா இருந்துருக்கு. அப்ப அகில்-ங்குற இளைஞரோட வீட்டுக்கு போன ஒரு கும்பல் அவர வீட்ட விட்டு வெளியில கூப்டு வந்து பயங்கரமா வாக்குவாதம் பண்ணி, திடீர்ன்னு மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து சரமாரியா குத்திருக்காங்க.இதுல, சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த அகில், ரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்தாரு. அகிலோட அலறல் சத்தத்த கேட்டு ஒடி வந்த கிராம மக்கள் அவர மீட்டு பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அங்க சிகிச்சை அளிச்ச டாக்டர் அகில் உயிரிழந்துட்டதா சொல்லிருக்காங்க. அடுத்து விசாரணையில இறங்குன போலீசார், கொலையாளிகள் யாருன்னு தெரிஞ்சுக்க அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகள் எல்லாத்தையும் ஆய்வு பண்ணிருக்காங்க.இதுக்கிடையில் போலீஸ்க்கு ஒரு ஃபோன் கால் வந்துருக்கு. எதிர்முனையில பேசுன ஒருத்தரு, சார் ரயில்வே ஸ்டேஷன்ல ரத்தம் படிஞ்ச சட்டையோட மூணு பேரு நின்னுட்டு இருக்காங்க, அவங்க மேல சந்தேகமா இருக்கு, அதனால கொஞ்சம் சீக்கிரம் வந்து அவங்கள பிடிச்சு விசாரிங்கன்னு சொல்லிருக்காரு. இதனால சம்பவ இடத்துக்கு போன போலீஸ் ரோகித், போப்பி, கிரிஷ்ன்னு மூணு பேர பிடிச்சுட்டு வந்து விசாரிச்சாங்க.கேரளாவுல உள்ள பரப்புக்கரா பகுதிய சேந்த 28 வயசான அகிலுக்கு இன்னும் கல்யாணமாகல. இவரு அதே ஏரியாவுல உள்ள ஒரு இளம்பெண்ண காதலிச்சிட்டு இருந்துருக்காரு. அந்த பொண்ணு எங்க போனாலும் பின்னாடியே ஃபாலோ பண்றது, பேச முயற்சி பண்றதுமா இருந்துருக்காரு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி இளம்பெண்ண பின் தொடர்ந்து போய்ருக்காரு அகில். அப்ப எதுக்கு என்ன ஃபாலோ பண்றிங்கன்னு அந்த பொண்ணு கேட்க, அதுக்கு அகில் நான் உங்கள உயிருக்கு உயிரா காதலிக்குறேன், உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்னு சொல்லிருக்காரு.இந்த லவ்-லாம் எங்க குடும்பத்துக்கு செட் ஆகாது, எங்க அண்ணன் பெரிய ரவுடி அவனுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆகிரும், அதனால என்ன இனிமே டார்ச்சர் பண்ணாதன்னு சொல்லிருக்காங்க அந்த இளம்பெண். அதுக்கு அகில் தயவு செஞ்சு அப்படி சொல்லாதிங்க, நீங்க தான் என்னோட எதிர்காலமே, நீங்க இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பாக்க முடியல, அதனால என் லவ்வுக்கு ஓகே சொல்லுங்கன்னு கெஞ்சுருக்காரு.அகிலோட நடவடிக்கைய பாத்த கடுப்பான அந்த இளம்பெண் அகில திட்டிட்டு அங்கருந்து போய்ட்டாங்க. ஆனா அகில், விடாம அந்த பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்துட்டே இருந்துருக்காரு.இதனால அந்த இளம்பெண் அகில பத்தி தன்னோட அண்ணன் ரோகித் கிட்ட சொல்லிருக்காங்க. இதகேட்டு கடும் கோபமான ரோகித் தன்னோட நண்பர்களான போப்பி, கிரீஷ கூப்டுட்டு அகிலோட வீட்டுக்கு போய் மிரட்டிருக்காரு. ரெண்டு தரப்புக்கு இடையில பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. ரோகித்த பாத்து அகில் தகாத வார்த்தையில திட்டுனதா கூறப்படுது. இதனால கடும் கோபமான அந்த மூணு பேரும் மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து அகில்ல சரமாரியா கை, கால், கழுத்துன்னு எல்லா இடங்களையும் கொடூரமா குத்திக் கொன்னுட்டாங்க.அடுத்து கொலையாளிகள் மூணு பேரும் போலீஸ் கிட்ட சிக்காம இருக்க அங்கருந்து, வேற ஏதாவது ஊருக்கு தப்பிச்சு போக முடிவு பண்ணிருக்காங்க. அதுக்காக பக்கத்துல உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு போய்ருக்காங்க.ஆனா, அந்த மூணு பேரோட சட்டையிலையும் ரத்தக்கற இருந்தத பாத்த அங்கருந்த ஒருத்தரு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாரு. அதுக்கடுத்து உடனே அங்க போன போலீஸ் ரோகித், போப்பி உள்ளிட்ட 3 பேரை அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.