இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றிக்கு காரணம் அவரது தனித்துவமான கதாபாத்திரங்கள்தான் என நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விக்ரம் படத்தை எடுத்துக்கொண்டால் அதில் பகத் பாசில், விஜய் சேதுபதி என அனைவரது கதாபாத்திரங்களை விட டீனா கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார்.