கேரள மாநிலம் கண்ணூரில் லோடு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தாம் புதிதாக கட்டி வரும் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சடலமாக கிடந்தது தொடர்பாக,கட்டுமான ஒப்பந்ததாரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் சந்தோஷ் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர் என்பதால், அவர் ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.