ஆந்திராவில் 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, மனைவியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை லோன் ஆப் ஏஜெண்டுகள் பரப்பியதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் நரேந்திரனால், மோசமான வானிலை காரணமாக கடலுக்குச் செல்ல முடியாமல் போனது. இதனால் கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், லோப் ஆப் ஏஜெண்டுகள் அத்துமீறியதாக கூறப்படுகிறது.