பிறந்தநாள் வந்தாலோ, புதுசா கல்யாணம் பண்ணவங்களையோ, பொதுவா ஒருத்தங்கள வாழ்த்துறதுக்கோ, ”100 வருஷம் குழந்தை குட்டியோட நல்லா இருக்கனும்”னு சொல்லுவோம்ல. ஆனா எத்தன பேரு 100 வருஷம் வாழுறாங்க? கைவிட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் ஒரு சிலர் 100 வயச தாண்டி வாழுறாங்க. சரி, மனிதனோட ஆயுட்காலம் சராசரியா இந்தியாவுல எந்தெந்த மாநிலங்களல எவ்ளோ இருக்குனு இப்போ பாக்கலாமா? இந்தியாவ பொறுத்த வரைக்கும் சில மாநிலங்களில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமா தான் இருக்கு.மக்கள் தொகை அதிகமா கொண்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களோட சராசரி ஆயுட்காலம் பல காரணிகளினால் மாறுபடுது. நம்மளோட வாழ்க்கை முறை, மருத்துவ வசதி, உணவுப் பழக்கம், பொருளாதார நிலை, கல்வி, சுற்றுச்சூழல் தரம் போன்றவை இந்த ஆயுட்காலத்தில் முக்கிய பங்கு வகிக்குது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்திய மாநிலங்களின் சராசரி ஆயுட்காலத்தில் பெரிய difference இருக்கு. அதில் முக்கியமாக, கேரளா மாநிலம் தான் 1st place. இந்திய அளவுல அதிக ஆயுட்காலம் கொண்ட மாநிலமா இருக்கு. கேரளாவுல உயர்ந்த கல்வி விகிதம், தரமான மருத்துவ சேவைகள், சுகாதார விழிப்புணர்வு, பொது சுகாதார திட்டங்கள், சுத்தமான சூழல் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் ஆகியவை, கேரள மக்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்க கூடிய முக்கிய ஃபேக்டர்ஸா இருக்கு. சோ, கேரளாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 75.1 ஆண்டுகள். அதாவது இங்குள்ள மக்கள் சராசரியாக 75 ஆண்டுகள் வாழ்கிறார்கள். பெண்களின் சராசரி ஆயுட்காலம் 79.9 ஆண்டுகள் மற்றும் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 72.2 ஆண்டுகள். ஜம்மு காஷ்மீர் இரண்டாவது இடத்தில் இருக்கு. இங்குள்ள மக்கள் சராசரியாக 73.5 ஆண்டுகள் வாழுறாங்க. இங்கு பெண்களின் ஆயுட்காலம் 76.2 ஆண்டுகள், ஆண்களின் ஆயுட்காலம் 71.6 ஆண்டுகள். தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் 3rd place. இங்க இருக்க கூடிய மக்கள் சராசரியாக 72+ ஆண்டுகள் வாழுறாங்க. கர்நாடகா, மகாராஷ்டிரா 70–72 ஆண்டுகள் வரை வாழுறாங்க. தெலுங்கானா, ஆந்திரா – 70 ஆண்டுகள். வட மாநிலங்களான உ.பி, பீஹார், ஒடிஷா மாநிலங்கள்ல 65–68 ஆண்டுகள் வாழ்கிறார்கள்.