ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன ஓங்காளி அம்மன் பக்தர்களுக்கு மயூராம்பிகையாக காட்சியளித்தார். மயில்தோகைகளை கொண்டு, தோகை விரித்தாடும் மயில் மேல் அம்மன் அமர்ந்திருப்பது போல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.