ஆந்திர மாநிலம் குண்டூரில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டீல்களை போலீசார் அழிக்க முற்பட்டபோது, அவற்றை மதுப்பிரியர்கள் அள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.குண்டூரில் பல்வேறு வழக்குகளில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத மதுபாட்டீல்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.இதையடுத்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு JCB மூலமாக அழிக்க முற்பட்ட போது, அங்கு விரைந்த மதுப்பிரியர்கள், மதுபாட்டீல்களை தங்கள் இஷ்டம் போல் அள்ளி ஓட்டம் பிடித்தனர்.இதையடுத்து விரைந்த போலீசார் அவர்களை அடித்து விரட்டி மதுபாட்டீல்களை அழித்தனர்.